மெல்போனிலிருந்து கொழும்பு நோக்கிய பயணிக்க இருந்த ஶ்ரீ லங்கள் எயர்லைன்ஸிற்கு சொந்தமான UL-605 விமானம், பயத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் மெல்போர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாகவே, விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர், விமானத்திலிருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினை இணங்கண்டு அதனை சீர் செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகவும் ஶ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.