இலங்கை அணியில் மீண்டும் பினுர பெர்னாண்டோ.. 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்து வீச்சாளரான பினுர பெர்னாண்டோ இடம்பெற்றுள்ளார்.

பினுர பெர்னாண்டோ, இறுதியாக 2022ம் ஆண்டு இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்ததுடன், பின்னர் உபாதைக்கு உள்ளானர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிற்கு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும், சரித் அசலன்க உபத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை குழாமில் பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷானக, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், மஹேஷ் தீக்ஷன, மதிஷ பத்திரன, அகிலா தனஞ்ஜய , நுவான் துஷார, பினுர பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் போது உபாதைக்கு உள்ளான  துஷ்மந்த சமீர, இருபதுக்கு இருபது தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின், முதலாவது போட்டி எதிர்வரும் 17ம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

தொடரின் மற்றைய இரண்டு போட்டிகளும் முறையே 19ம் மற்றும் 21ம் திகதிகளில் தம்புள்ளையில் நடைபெறவுள்ளன. 

Social Share

Leave a Reply