இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனை இன்று (16.02) சந்தித்து, மரியாதை நிமித்தம் சந்தித்து பேசியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிதரன் எம்.பி. அவர்களின் வதிவிடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், தமிழர் நலன்சார்ந்த விடயங்களின்போது இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து செயற்பட தயார் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.