கல்வியில் ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும் – சஜித்

கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தில் பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கினாலும், மேல்மாகாணத்தில் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உலகை வெற்றிகொள்ளும் புதிய தொழில்நுட்பம் தொடர்பில் போது சரியாக அறிந்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு தனியார் பாடசாலைகளில் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கல்வியில் ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெரும் தரப்பின் பிள்ளைகளுக்கு உயர் தரத்தில் அமைந்த கல்வி வழங்கப்பட்டாலும் இலவசக் கல்வி இன்னும் தேக்கநிலையிலேயே இருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply