பதவியில் நிலைத்திருப்பாரா வைத்தியர் ருக்‌ஷான் பெல்லென? 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லெனவை பதவி நீக்குமாறு சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லென, கனிஷ்ட சுகாதார ஊழியர்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்திருந்தமையை கண்டித்தே, அவரை பதவி நீக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.  

கடந்த 16ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவை அவருடைய அலுவலகத்தில் தடுத்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவை  இன்று (19) சந்திக்கவுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தோல்வி அடையும் பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் மீள தீர்மானிக்கப்படும் என ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply