சாந்தனின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையில்…

சென்னையில் கடந்த 28ம் திகதி உயிரிழந்த சாந்தனின் உடல் நேற்று (01.03) முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவரது சடலத்தை விடுவிப்பதற்கான ஆவணத்தில் பிரச்சினைகள் காணப்பட்டமையினால் நேற்று பிற்பகல் வரையில் சடலம் விடுவிக்கப்படவில்லை எனவும் ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply