ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இன்று(04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தின் போது காயமடைந்த மற்றைய நபர், அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய மன்னா ரோசான் என்பவரின் சகோதரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.