மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில், பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொம்பகஹவெல பொலிஸாரினால், குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச் சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை, உரிய பாடசாலையின் அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மொனராகலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தொம்பகஹவெல பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.