இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இதில் கமிந்து மென்டிஸ் 37 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 36 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரஸ்கின் அஹமட், மெஹ்தி ஹசன், முஸ்ரபைசூர் ரஹ்மான், சௌமியா ஷர்கார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. இதில் நஜ்முல் ஹொசைன் சண்டோ 53 ஓட்டங்களையும், லிட்டோன் டாஸ் 36 ஓட்டங்களையும், தௌஹீத் ரிதோய் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மதீஷ பத்திரன 2 விக்கெட்ளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளடங்கிய தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது.