கிளிநொச்சியில் வெள்ளை ஈ சம்பந்தமான விழிப்புணர்வு முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ நோய்த்தாக்கம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றுமுன்தினம்(05.03) அம்பாள்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .

இந்த விழிப்புணர்வு கலந்துரையாடல் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தென்னை பயிர்செய்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின் பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு உத்தியோகத்தர்களால் மருந்தும் தெளித்துக் காட்டப்பட்டு விழிப்பூட்டல் செய்யப்பட்டது.

Social Share

Leave a Reply