மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வலம்புரி சங்கு மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டபோது, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.