மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

8 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இயங்காமல் உள்ள இரண்டு மின்தூக்கிகள் (லிஃப்ட் ) புதுப்பிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

பார்சல்களுக்கான லிஃப்ட் 5வது தளம் வரை மட்டுமே இயங்குவதாகும், அங்கிருந்து அஞ்சலகப் பொருட்களை அஞ்சலக ஊழியர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply