குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11.03) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளின் குறைபாடுகள் இருந்தால், குறித்த சுற்றிவளைப்புக்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றால், இவை தவிர்ந்த மேலும் பல நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.