ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குளியாபிட்டிய பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
காயத்திற்கு மருந்து போடும்போது வலி ஏற்படுவதாக தெரிவித்த அவர், ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டின் பொருளாதாரத்தின் காயத்தை ஆற்றும் மருந்தை தடவி வருவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பொருளாதார நிலை வழமைக்கு திரும்பும்போது மக்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.