காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

அம்பாறை-பொத்துவில் சங்கமன்கந்த பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த 50 வயதுடைய வெளிநாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share