நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பட வேண்டிய நாள் இன்று

சர்வதேச நுகர்வோர் உரிமை தினமான இன்று நாட்டின் பொது மக்கள் பட்டினியில் தவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 123 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, சீதாவக்கை, சாந்த ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டார்.

மூன்று வேளை உணவு உண்டு வாழ முடியாத சகாப்தம் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழ்மைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் அதிகரித்த வாழ்க்கைச் செலவால் நுகர்வோர் உரிமைகளை முற்றாக இழந்துள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து நுகர்வோர் உயிரிழந்தும், தரக்குறைவான உரங்களால் விவசாய பயிர்கள் அழிந்தும், வகுப்பறைகளில் மாணவர்கள் மயக்கமடைந்த போதும் இன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

நுகர்வோர் உரிமைகளை உள்ளடக்கிய அரசியலமைப்புத் திருத்தம் தேவையையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply