வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான வெப்ப சுட்டெனானது வளிமண்டலவியல் திணைக்களதினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது மேற்கூறிய பகுதிகளில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.