இந்திய மக்களவை தேர்தல் திகதி அறிவிப்பு..!

இந்திய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை தேர்தல் இடம்பெறவுள்ளது. 

முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 22 ஆம் திகதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் இடம்பெறவுள்ளது.

அடுத்தகட்டமாக, மே 7ம் திகதி நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.  

இதனை தொடர்ந்து, மே 13, 25 மற்றும் ஜூன் முதலாம் திகதிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. 

ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை இடம்பெறவுள்ளதுடன், ஜூன் 7ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Social Share

Leave a Reply