கோப் குழுவிலிருந்து விலகினார் இரான்!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப் குழு) உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

நிலையிற் கட்டளையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்தோம். நிலையிற் கட்டளையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை.

இது வரை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் எந்த முன்னேற்றங்களும் இல்லை. கோப் பேசும் இடமாக இருந்து வருகிறதே ஒழிய நடவடிக்கைகள் எடுக்கும் எந்த நடைமுறையும் அதில் இல்லை.

2015-2019 காலப்பகுதியில் புதிய முற்சிகளை ஏற்படுத்தினோம்.தலைவர் பதவியை எதிரக்கட்சிக்கு வழங்கினோம்.தடைகள் மற்றும் சமன்பாடுகளை ஏற்படுத்தினோம்.

இந்த அரசாங்கத்திற்கு எந்த Legitimacy யும் இல்லை.

இந்த அரசாங்கம் கோப்பை பயன்படுத்தி மோசடிகள், ஊழல் திருட்டுகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது.

Social Share

Leave a Reply