மாலைத்தீவு பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான வாக்கு பெட்டிகளை இலங்கை, இந்தியா மற்றும் மலேசியாவில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு வாக்காளர்களுள் சுமார் 11,000 வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களை இடமாற்றம் செய்யுமாறு விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாலைத்தீவு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21ம் திகதி நடைபெறவுள்ள மாலைத்தீவு பொதுத் தேர்தலின் போது, இலங்கையில் கொழும்பிலும், இந்தியாவில் திருவனந்தப்புரத்திலும் மற்றும் மலேசியாவில் கோளாளம்பூரிலும் 150 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு மீள் பதிவு செய்துள்ளனர்.
மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.