குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் முதல் 272 வெற்றிடங்கள் நிலவுவதாக கோப் குழுவின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் (16/11) இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய சிரேஸ்ட மட்டத்தில் 18 வெற்றிடங்களும், 3ஆம் நிலை பிரிவில் 113 வெற்றிடங்களும், 2ஆம் நிலை பிரிவில் 121 வெற்றிடங்களும் மற்றும் முதல் நிலையில் 19 வெற்றிடங்களும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கோபா குழு முன்வைத்த இந்த தரவுகளுக்கு அமைய, குறித்த வெற்றிடங்களினால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்ப்பதற்கு விரைவாக வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.