வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 08 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் வவுனியா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு நீதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா,அன்ரன் புனிதநாயகம்,திருஅருள்,க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர்.