கோப் குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விலகியுள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரே விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவிற்கு புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊழலை தவிர்க்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு நாடாளுமன்ற குழுக்களும் ஊழலற்றதாக இருக்க வேண்டும் என தயாசிறி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கோப் குழு உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக நேற்று(18) அறிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply