மற்றுமொரு டெல்டா திரிபு கண்டுப்பிடிப்பு

நாட்டில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட B.1.617.2.28 திரிபை ஒத்த B.1.617.2.104 என்ற புதிய டெல்ட்டா திரிபொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை நேற்று (18/11) மற்றும் அண்மைய நாட்களாக சுகாதார துறையினர் புதிய டெல்டா திரிபொன்று ஏற்படலாமென எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மற்றுமொரு டெல்டா திரிபு கண்டுப்பிடிப்பு

Social Share

Leave a Reply