எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு முற்றாக நீங்கிவிடுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 6 நாட்களில் அதற்கான தீர்வு கிட்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் இலங்கையை இனி தொடர்ச்சியாக வந்தடையும் என்பதால் நாட்டிற்குள் இதுவரை நிலவிவந்த எரிவாயு தட்டுப்பாடு நீங்கிவிடுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.