கோட்டை, ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோட்டையிலிருந்து மாகும்புர நோக்கிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கோட்டையிலிருந்து மாக்கும்புர நோக்கி பயணித்த கெப் வாகனத்தில் மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் கெப் வண்டியின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கொடிகாமம் புத்தூர் சந்திக்கு அருகில் சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்