கிரீஸில் நிலநடுக்கம்

கிரீஸின் தெற்குப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ப்ரைகோஸிலிருந்து தென்மேற்கே 56 கிமீ தொலைவில் இன்று காலை நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 6 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கத்தின் போதான சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

Social Share

Leave a Reply