ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றம்

கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலபொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

குருணாகல் விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு கடந்த 28ம் திகதி  கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஞானசார தேரர் நேற்றைய(29) தினம் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

மேலும், கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply