பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகரான டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பின் காரணமாக நேற்றிரவு(29) உயிரிழந்துள்ளார்.
48 வயதான டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் என்ற பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்திலும் வில்லனாக நடித்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
டேனியல் பாலஜியின் மரணம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாகவே தன்னுடைய மரணத்தின் கண்களை தானம் செய்வதற்கு அவர் தீர்மானித்திருந்தார்.