நெடுஞ்சாலைகளின் செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் இன்று (01) முதல் நெடுஞ்சாலைகளின் முகாமைத்துவம் தனியாரினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தனியார் துறையினர் இணைந்து நடத்திய சட்ட மற்றும் நிதி சாத்தியக்கூறு ஆய்வின் பின்னர், நெடுஞ்சாலைகளுடன் தொடர்புடைய அனைத்து சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் காணப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழியர்களின் முகாமைத்துவம் போன்ற செயற்பாடுகள் தனியார் நிறுவனத்திற்கு மாற்றும் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.