துமிந்த, லசந்த, மஹிந்தவின் கட்சி வெளியேற்றத்திற்கு இடைக்கால தடை 

துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கடந்த மாதம் 30ம் திகதி நீக்கப்பட்டிருந்தனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(01) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Social Share

Leave a Reply