டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 304 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நிலையாக காணப்படுகின்றது.

Social Share

Leave a Reply