2024 ஐ.பி.எல் – சகல விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணி..!    

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. 

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று(02) நடைபெற்ற போட்டியில் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 28 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோவ் அணி 20 ஓவர்கள் நிறைவில்  5 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

லக்னோவ் அணி சார்பில், டி கொக் 81 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ஓட்டங்களையும், ஸ்டோய்னிஸ் 24 ஓட்டங்களையும் மற்றும் கே.எல். ராகுல் 20 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பந்துவீச்சில் மக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக கைப்பற்றிக் கொண்டார். 

182 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணியால் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை  மாத்திரம் பெற்றுக்கொண்டது.   

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அணியொன்று சகல விக்கெட்டுகளையும் இழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.  

இதன்படி, இந்த போட்டியில் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 28 ஓட்டங்களினால்  வெற்றியீட்டியது. 

பெங்களூரு அணி சார்பில் மஹிபால் லோம்ரோர் 33 ஓட்டங்களையும், ராஜட் பட்டிடர் 29 ஓட்டங்களையும், விராட் கோலி 22 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில் மயங் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் ஏனைய பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இந்த  போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியதுடன், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்நதும் 9 இடத்திலேயே காணப்படுகின்றது. 

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நாளை(03) நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Social Share

Leave a Reply