தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தாய்வானின் Hualien நகருக்கு தெற்கே 18 கிலோமீற்றர் தொலைவில் 34.8 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று (03) காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மியாகோஜிமா தீவு உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள ஜப்பானிய தீவுகளுக்கு மூன்று மீற்றர் உயரம் வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1999 ஆம் ஆண்டு , தாய்வானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 2,400 பேர் உயிரிழந்த மை குறிப்பிடத்தக்கது.