தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 800 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்..
தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று காலை 7.4 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.
Hualien நகருக்கு தெற்கே 18 கிலோமீற்றர் தூரத்தில் 34.8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்போது, நெடுஞ்சாலை சுரங்கங்களில் பலர் சிக்குண்ட நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மினி பஸ்களில் பயணித்த Silk’s Place Hotel Taroko ஊழியர்கள் 50 பேர் உட்பட சுமார் 131 பேர் தற்போது சுரங்கப்பாதைக்குள் சிக்குண்டுள்ள நிலையில்
அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Hualien County-இல் மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.