பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.