நடிகை தமித்தா அபேரத்னவும் அவரது கணவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து , இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டனர்.
கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 30 இலட்சம் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.