அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 365
டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மேல் மாகாணத்தில் 7 ஆயிரத்து 28 டெங்கு நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு டெங்கு நோயினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply