யுக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்குப் பகுதியான ஷெவ்சென்கிவ்ஸ்கியை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.