மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த மாணவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, ஆசிரியரை  கைது செய்ததாக  ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 3ம் திகதியன்று மாணவனின் முகம் மற்றும் தலையில் ஏற்பட்டிருந்த காயங்களை அவதானித்த பெற்றோர், காயங்கள் தொடர்பில் மாணவனிடம் வினவிய போது ஆசிரியர் தன்னை தாக்கியதாக மாணவன் தெரிவித்துள்ளான். 

இந்த விடயம் தொடர்பில் மாணவனின் பெற்றோர் ஆசிரியரிடம் தொலைப்பேசியில் வினவிய போது, ஆசிரியர் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என குறித்த  மாணவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, பெற்றோர் குறித்த ஆசிரியை தொடர்பில்  ஈச்சங்குளம் பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளனர். 

இந்த முறைப்பாட்டிற்கு அமைய  ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த ஆசிரியரை  இன்று (07) கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர், வடமாகாண கல்வி திணைக்களத்தினர், வவுனியா வடக்கு கல்வி வலயத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply