படகு மூழ்கியதில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு..!

மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளனர். 

கடலில் பயணித்துக் கொண்டிருந்த படகு மூழ்கியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

படகில் பயணித்த சுமார் 130 பேரில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களில் பல சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. நீரில் மூழ்கிய ஏஎனைய நபர்களை மீட்டுகம் பணிகள் முன்னேடுக்கப்பட்டுள்ள போதும், கடல் சீற்றத்தின் காரணமா மீட்பு பணியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கொலோரா நோய் பரவலில் இருந்து தப்பிப்பதற்காக பலர் இவ்வாறு படகின் மூலம் வேறொரு பிரதேசத்திற்கு பயணிப்பதற்கு முயற்சித்துள்ளனர். 

படகில் அதிகமான பணிகள் பயணித்துள்ளமையினால், படகு நீரில் மூழ்கியுள்ளது. 

இந்த விபத்து தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உறுதி செய்யப்படாத காணொளிகள், கடற்கரையோரங்களில் பலரின் சடலங்கள் காணப்படுகின்றதை  போன்று காட்சியளிக்கின்றன.  

Social Share

Leave a Reply