நல்லத்தண்ணி – வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஆலயமொன்றின் திருவிழாவின் போது இடம்பெற்ற அன்னதானத்தில் கலந்துக்கொண்டதையடத்து உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.