2024 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் 13 ஆம் திகதி இரவு 8 மணி 15 நிமிடத்துக்கு பிறக்கின்றது. இதன் காரணமாக எப்போது இறை வழிபாட்டில் ஈடுபடுவது மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்பது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா, குடியிப்பு பிள்ளையார் ஆலய பிரதம குருவும், விநாயகர் சோதிட நிலைய குருவுமான சிவஸ்ரீ கந்த.கணேசதாச குருக்கள் வி மீடியாவுக்கு விளக்கமளித்துள்ளார்.
வருடப் பிறப்பு நிகழ்வது பங்குனி மாதம் 31 ஆம் திகதி. சூரிய உதயத்தின் பின்னரே தமிழ் மரபு முறைப்படி மறு நாள் உதயம். இருப்பினும் விஷ புண்ணிய காலம் 13 ஆம் திகதி பிற்பகல் 4.15 முதல் நள்ளிரவு 12.15 மணிவரை காணப்படுவதனால் அந்த நேரத்தில் மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து இறை வழிபாடுகளை செய்வதே மிகச் சிறந்தது. அதன் பின்னர் மறு நாள் ஏனைய கொண்டாட்டங்களில் ஈடுபடலாம்.
மேலதிக விபரங்கள் கீழுள்ளன.