ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ளதூக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
யானை அல்லது மொட்டு சின்னத்தை தவிர்த்து புதிய சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளதாக ஆஷு மாரசிங்க ஊடகவியலாளர்களுக்கு இன்று(09) தெரிவித்துள்ளார்.
பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவார் எனவும் ஆஷு மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் 80 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகள் ஒன்றினைய வேண்டும் எனவும் ஆஷு மாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.