இந்த வருடமும் வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லைஅடுத்த வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில், வாகன இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பளமாக 107 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2.7 மில்லியன் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோகிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.