நோன்பு பெருநாள் போதனைகளின் ஊடாக நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என ஜனாதிபதியினால் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியாக தீர்வு காண மூவர் கொண்ட விசேட குழுவின் உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சுப்பையா ஆனந்தகுமார் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறைவனின் திரு வசனங்கள் இறங்கிய மாதம் என்பதால் ரமழான் மாதத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று.
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பு எடுத்துரைக்கப்படுகிறது.
பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால்,உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில், பொருளாதாரம் மேம்பட்டு – பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் இன ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும்.
இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடைகளை வழங்கி அன்போடும், பண்போடும், இறை பக்தியோடும் பெருநாளை கொண்டாடும் ” இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் வேண்டும் தமது வாழ்த்து செய்தியில் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.