இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள் இறப்பது மிகவும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் வவுனியாவில் இதுவரை இரண்டாவது தடுப்பூசிகளை பெறாதவர்கள் அண்ணளவாக 20,000 பேருள்ளனர். இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு மட்டுமே மூன்றாவது தடுப்பூசிகள் வழங்கப்படும்.
ஆகவே உடனடியாக இரண்டாவது ஊசிகளை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாவது ஊசிகளை பெறாதவர்களுக்கு பைசர் ஊசிகள் ஏற்றப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிகள் பைசர் ரக தடுப்பூசிகளாக வழங்கபப்டுகின்றன. பைசர் ஊசிகளை பெறுபவர்கள் சகல நாடுகளுக்கும் செல்ல முடியும். ஆகவே இரண்டாவது சினோபோர்ம் ஊசிகளை உடனைடியாக ஏற்றிக்கொள்ளுமாறு வைத்தியகலாநிதி லவன் தெரிவித்துள்ளார்.
சினோபோர்ம் தடுப்பூசிகளை பெற்றவர்கள் தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.