அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த ரூபாவின் பெறுமதி தீடீர் வீழ்ச்சியை கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ள
அத்துடன் விற்பனை விலை 303 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சில வர்த்தக வங்கிகளிலும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.