மீள்குடியேற்ற கிராமங்களுக்கு புதிய பஸ் சேவை

வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பஸ் சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆரம்பித்து வைத்தார்.

வயாவிளான் பகுதிக்கு அமைச்சர், அண்மையில் களவிஜயம் மேற்கொண்டபோது,அப்பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கமைய, வட பிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.

மீள்குடியேறிய மக்களுக்கான போக்குவரத்து சேவையை இலகுபடுத்தும் வகையில் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பஸ் சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பளை வைத்தியசாலையை அடைந்து கேகேஎஸ் வீதி வழியாக யாழ் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வறுத்தலைவிளான் சாந்தை சந்தி வரையிலான சேவையை தையிட்டி ஆவளைச் சந்தி வரை நீடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆரம்ப வைபவமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு புதிய பஸ் சேவை

Social Share

Leave a Reply