விரிவான நிதி சீர்திருத்தங்களின் பின்னர் வரி வருமானத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருவாய் 8.1 வீதத்திலிருந்து 11 வீதமாக அதிகரித்துள்ளது.
இந்த வருடம் 12 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் வழங்குநர்களுடன் கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.